அம்மாச்சி உணவகத்துக்கு சிங்களப் பெயர் வைத்தால்தான் மன்னாரிலும் அமைக்கும் உணவகங்களுக்கு பணம் தருவோம் -அரசாங்கம்!
அம்மாச்சி உணவகத்துக்கு சிங்களத்தில் பெயர் வைத்தால்தான் யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் அமைக்கும் உணவகங்களுக்கு பணம் தருவோம் என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் ஏற்கனவே அம்மாச்சி உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும் அமைப்பதற்கு மத்திய அரசாங்கத்திடம் நிதி கோரியிருந்தோம்.
அதற்கு அவர்கள் சிங்களத்தில் பெயர் போட்டால்தான் பணம் தருவோம் எனக் கூறுகிறார்கள். பணத்தினைத் தரும்போது சிங்களத்தில் பெயர்போட்டால்தான் தருவோம் எனக் கூறியிருந்தால் நாம் அந்தப் பணத்தைப் பெற்றிருக்கமாட்டோம்.
எங்களுக்கு நன்மை செய்வதாகச் சொல்லித்தான் பணத்தைத் தந்தார்கள். தமிழர் பாரம்பரிய உணவகத்துக்கு சிங்களப் பெயர் தேவையில்லை. இவ்வாறு சொல்லித்தான் தமிழர்களின் இருப்பையே அழித்து வருகின்றனர் எனத்தெரிவித்தார்.
இது தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் ஏற்கனவே அம்மாச்சி உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும் அமைப்பதற்கு மத்திய அரசாங்கத்திடம் நிதி கோரியிருந்தோம்.
அதற்கு அவர்கள் சிங்களத்தில் பெயர் போட்டால்தான் பணம் தருவோம் எனக் கூறுகிறார்கள். பணத்தினைத் தரும்போது சிங்களத்தில் பெயர்போட்டால்தான் தருவோம் எனக் கூறியிருந்தால் நாம் அந்தப் பணத்தைப் பெற்றிருக்கமாட்டோம்.
எங்களுக்கு நன்மை செய்வதாகச் சொல்லித்தான் பணத்தைத் தந்தார்கள். தமிழர் பாரம்பரிய உணவகத்துக்கு சிங்களப் பெயர் தேவையில்லை. இவ்வாறு சொல்லித்தான் தமிழர்களின் இருப்பையே அழித்து வருகின்றனர் எனத்தெரிவித்தார்.
அம்மாச்சி உணவகத்துக்கு சிங்களப் பெயர் வைத்தால்தான் மன்னாரிலும் அமைக்கும் உணவகங்களுக்கு பணம் தருவோம் -அரசாங்கம்!
Reviewed by NEWMANNAR
on
August 05, 2017
Rating:

No comments:
Post a Comment