இத்தாலி: 2 மணிநேரம் கொட்டித்தீர்த்த கனமழை - வெள்ளத்திற்கு 05பேர் பலி
இத்தாலி நாட்டின் தஸ்கேனி பகுதியில் இன்று காலை சுமார் இரண்டு மணிநேரம் பெய்த பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர்.
இத்தாலி நாட்டின் தஸ்கேனி பகுதியில் (உள்ளூர் நேரப்படி) இன்று அதிகாலை 2 மணியில் இருந்து 4 மணி வரை சுமார் 25 செண்டிமீட்டர் அளவிற்கு பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் வீதிகளில் இருந்த வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.
இந்நிலையில், இந்த வெள்ளத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் மூன்று பேர் காணாமல் போயிருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரு விட்டில் வெள்ளத்தில் மூழ்கி இறந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மழையினால் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மற்றொரு சடலம் கண்டெடுக்கப்பட்டது என மீட்புபணியில் ஈடுபட்டுவருபவர்கள் தெரிவித்தனர்.
நிலவரம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாததால் மேலும் அதிக சேதம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக விவோர்னோ மெயர் தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்கள் கருதி அப்பகுதியில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளும் மூடப்பட்டுள்ளன.
இத்தாலி: 2 மணிநேரம் கொட்டித்தீர்த்த கனமழை - வெள்ளத்திற்கு 05பேர் பலி
Reviewed by Author
on
September 10, 2017
Rating:
Reviewed by Author
on
September 10, 2017
Rating:


No comments:
Post a Comment