மன்னார் எழுத்தூர் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் வருடாந்த ஆலய விழா சிறப்பாக இடம்பெற்றது
மன்னார் எழுத்தூர் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் ஆலய வருடாந்த ஆலய உற்சவவிழாவானது 27-08- 2017 ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்று
15ம் நாள் 10-09- 2017ஞாயிற்றுக்கிழமை அஷ்வினி நட்சத்திரம் கூடிய சுபநன்நாளில் காலை 6-00 மணிக்கு செல்வநகர் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இருந்து காவடி பாற்குடம் பவனி எடுத்துவரப்பட்டு 8-00 மணிக்கு அஷ்டோத்திர சங்காபிஷேகம்- (108) நடைபெற்று அதனைத்தொடர்ந்து.
திருத்தோற்சவமும் மகேஸ்வரப்பூசையும் (அன்னதானமும்) இடம் பெற்று மாலை ஆறுமணிக்கு மூலஸ்தான பூசையும் அதனைத்தொடர்ந்து விசேட வசந்த மன்டபபூசையும் திருவூஞ்சலும் இடம்பெற்று அம்பாள் உள்வீதி உலா வருதலும் கிராமப் பிரதட்சணமும் இடம்பெற்றது
அம்பாளின் அருள்கடாச்சம் பெறுவதற்கு பக்தடியார்கள் பவனியில் இணைந்திருந்தனர்

மன்னார் எழுத்தூர் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் வருடாந்த ஆலய விழா சிறப்பாக இடம்பெற்றது
Reviewed by Author
on
September 10, 2017
Rating:

No comments:
Post a Comment