மன்னாரில் சர்வதேச ரீதியில் அங்கிகரிக்கப்பட்ட தொழிலாளர்களாக தெரிவு செய்யப்பட்ட '291' பேரூக்கு சான்றிதழ் வழங்கி அங்கீகாரம்-(படம்)
தேசிய பயிலுனர் கைத்தொழிற்பயிற்சி அதிகார சபையின் நிகழ்சித்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் அனுபவம் சார்ந்த தொழில் கற்கை நெறியை மேற்கொண்ட சுமார் 291 நபர்களுக்கு சர்வதேச ரிதியிலான சான்றிதழ்கள் இன்று வியாழக்கிழமை(7) காலை மன்னார் நகர மண்டபத்தில் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தேசிய பயிலுனர் கைத்தொழிற்பயிற்சி அதிகார சபையினாவ் மன்னாரில் மேசன், தச்சன், தையல், நீர்குழாய் பொருத்துதல், மோட்டார் மெக்கானிக், கனணி, சார்ந்த மென்பொருள், வன்பொருள், கிராபிக்ஸ், ஏனைய தொழில் பயிற்சிகளை சிறப்பாக பூர்த்தி செய்தவர்களுக்கே குறித்த சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட பயிற்சி நெறிக்கான சான்றிதழ்களை குறித்த நிறுவனத்தின் அதிகாரிகள் வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.
- மன்னார் நிருபர்-

மன்னாரில் சர்வதேச ரீதியில் அங்கிகரிக்கப்பட்ட தொழிலாளர்களாக தெரிவு செய்யப்பட்ட '291' பேரூக்கு சான்றிதழ் வழங்கி அங்கீகாரம்-(படம்)
Reviewed by Author
on
September 07, 2017
Rating:

No comments:
Post a Comment