சிரியாவில் ரஷ்ய படையினர் நடத்திய விமானப் படை தாக்குதலில் பொதுமக்கள் 34 பேர் பலி
சிரியாவில் ரஷ்ய படையினர் நடத்திய விமானப் படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 34 பேர் கொல்லப்பட்டனர்.
சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதுவரை அங்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் ரஷ்யாவும் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிரியாவில் ரஷ்யாவின் விமான படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 34 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், சிரியாவின் டேர் எஸ்ஸர் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து ரஷ்ய விமானப்படை தாக்குதலை நடத்தியது. ஆனால், இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் படுகொலைக்கு ஆளாகினர். இதில் 9 குழந்தைகள் உள்பட 34 பேர் கொல்லப்பட்டனர். அங்குள்ள ஆற்றில் இருந்து தொடர்ந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. மேலும் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கைகள் தொடரும் என தெரிவித்துள்ளது.
சிரியாவில் ரஷ்ய படையினர் நடத்திய விமானப் படை தாக்குதலில் பொதுமக்கள் 34 பேர் பலி
Reviewed by Author
on
September 11, 2017
Rating:

No comments:
Post a Comment