மாணவி அனிதா மரணம் குறித்து நீதி விசாரணை கோரும் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை பதிவு:
நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா மரணம் குறித்து நீதி விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா மரணம் குறித்து நீதி விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வால் பாதிக்கப்பட்ட அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் ஜி.எஸ்.மணி என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், அரசியல் காரணங்களுக்காக ‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் மாணவர்களை தூண்டி விட்டு சில கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன. இது போன்ற தூண்டுதல் காரணமாகவே மாணவி அனிதா தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் என்று கருத முடிகிறது.
எனவே மாணவி அனிதா தற்கொலை குறித்து ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஒருவரின் தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். இதுபோன்ற சட்டவிரோதமான போராட்டங்களுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கவேண்டும். என அதில் கூறப்பட்டு இருந்தது.
எனினும், இதை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தினசரி வழக்கு விசாரணை பட்டியலில், இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒரு நாளைக்கு முன்பு அவசர வழக்காக கருதி விசாரிக்க முடியாது என்று நீதிபதிகள் மறுத்த நிலையில், அதற்கு மறுநாளே விசாரணை பட்டியலில் இந்த மனு இடம் பெற்று இருப்பதன் மூலம் இந்த வழக்கின் மீதான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாணவி அனிதா மரணம் குறித்து நீதி விசாரணை கோரும் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை பதிவு:
Reviewed by Author
on
September 08, 2017
Rating:

No comments:
Post a Comment