உலகிலேயே மிக சிறிய ஆளில்லா விமானம் தயாரிப்பு....
ஆண்ட்ராய்டு சென்ட்ரல் டிஜிட்டல் நிறுவனம் மிகக்குறைந்த அளவில் அதாவது ரூ. 2 ஆயிரம் செலவில் ஆளில்லா விமானங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா விமானங்கள் தற்போது நமது வாழ்வில் முக்கிய இடம் பிடித்து வருகிறது. வீடியோ மற்றும் சினிமா படம் எடுக்கவும், போட்டோக்கள் எடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
ஆளில்லா விமானங்களை பறக்கவிட்டு பலர் பொழுது போக்கு கேளிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தும் ஆளில்லா விமானங்களில் கேமராக்கள் பொருத்தப்படுவதால் அவை அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இந்நிலையில் ஆண்ட்ராய்டு சென்ட்ரல் டிஜிட்டல் நிறுவனம் மிகக்குறைந்த அளவில் அதாவது ரூ. 2 ஆயிரம் செலவில் ஆளில்லா விமானங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
அது மிகச்சிறிய அளவிலானது. இதை உள்ளங்கையில் அடக்கமாக வைத்துக்கொள்ள முடியும். இதில் 0.3 எம்.பி. திறனுள்ள கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடியோ மற்றும் போட்டோ எடுக்கலாம். இதை புல் தரையிலும் தரையிறக்கலாம். இதில் உள்ள பேட்டரியை 30 நிமிடத்தில் முழுவதுமாக சார்ஜ் செய்ய முடியும்.
உலகிலேயே மிக சிறிய ஆளில்லா விமானம் தயாரிப்பு....
Reviewed by Author
on
September 06, 2017
Rating:

No comments:
Post a Comment