25 வருடங்களாக திருத்தப்படாத பாதை! வீதிக்கு இறங்கிய 2000 பொது மக்கள்....
நுவரெலியா - கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேச மக்கள் இன்று போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.தாம் பயணிக்கும் பாதை கடந்த 25 வருடங்களாக திருத்தப்படாத காரணத்தினால் குறித்த எதிர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன்போது, தோட்ட சுமார் 2000 பொது மக்கள் 15 கி.மீ நடந்து வந்து புஸ்ஸல்லாவ - கெமுனுபுர பிரதேசத்தில் கண்டி - நுவரெலியா பிரதான பாதையை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில்,பெரட்டாசி தோட்டத்தில் அமைக்கப்பட்ட வைத்தியசாலை திறக்கப்பட்ட போதும் தற்போதும் மருந்தகமாகவே செயற்பட்டு வருகின்றது. நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெரும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்த வைத்தியசாலையில் நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெற முடியாது.மேலும், 25 கி.மீ பாதை முற்றாக சேதமடைந்துள்ளது. இப்பாதையில் பஸ் விபத்துக்கள் சுமார் 5 முறை இடம்பெற்றுள்ளது.
12 பேர் இறந்துள்ளனர். பலர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.போக்குவரத்தில் சிரமம் ஏற்படுவதால் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து குறித்த போராட்டத்தின் இறுதியில் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் கலந்துறையாடல் ஒன்று நடைபெற்று.
இதன்போது எடுக்கப்பட்டதீர்மானம் தொடர்பில் கொத்மலை பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
25 வருடங்களாக திருத்தப்படாத பாதை! வீதிக்கு இறங்கிய 2000 பொது மக்கள்....
Reviewed by Author
on
October 23, 2017
Rating:

No comments:
Post a Comment