யாழ். இளைஞன் கொலை: பொலிஸாரின் அடுத்த கட்ட நடவடிக்கை ஆரம்பம் -
யாழ். அரியாலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஏற்கனவே பல வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். அரியாலை - மணியம் தோட்டம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் மீது நேற்று மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதில் உதயபுரம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய டொன் பொஸ்கோ ரிக்மன் எனும் இளைஞன் உயிரிழந்திருந்தார்.
குறித்த துப்பாக்கிச்சூடு மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடிய தலைக்கவசம் அணிந்து வந்த இருவர் மேற்கொண்டதாக சில தகவல்களும், மணியம் தோட்டம் பிரதேசத்தில் கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை செய்வதற்கு மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். இளைஞன் கொலை: பொலிஸாரின் அடுத்த கட்ட நடவடிக்கை ஆரம்பம் -
Reviewed by Author
on
October 23, 2017
Rating:

No comments:
Post a Comment