பிரித்தானியாவில் மனநல பிரச்சினை: 3 லட்சம் பேர் பணியிலிருந்து விலகல் -
நீண்டகால மனநல பிரச்சினைகள் காரணமாக வருடாந்தம் 3 லட்சம் பேர், பணியிலிருந்து விலக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, மனநல ஆரோக்கியமின்மையானது, பிரித்தானிய பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை புலனாகின்றது என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த ஆய்வறிக்கையின் பரிந்துரையை ஏற்றுக்கொள்ளுமாறு தேசிய சுகாதார சேவைகள் மற்றும் பொது சேவை நிலையங்களை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், இவ்வாறான தருணத்தில் ஊழியர்கள் தங்களது பணியில் நிலைத்திருப்பதற்கு தொழில்தருனர்களும், அரசாங்கமும் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் குறித்த ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
பிரித்தானியாவில் மனநல பிரச்சினை: 3 லட்சம் பேர் பணியிலிருந்து விலகல் -
Reviewed by Author
on
October 27, 2017
Rating:

No comments:
Post a Comment