இனப் பிரச்சினையை அரசு தீர்க்காவிட்டால் - இன மோதலை தடுக்க முடியாது - தயாசிறி
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மூலம் தமிழர்களுக்கான இனப்பிரச்சினையை இப்போது தீர்க்காவிட்டால் நாட்டில் மீண்டுமொரு மோதல் ஏற்படுவதனை தடுக்க முடியாது எனவும், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்த வழியைவிட்டு வேறு வழியயான்று இருந்தால் அதனையும் பரீசிலிக்க தயார் என அரசாங்கத்தின் அமைச்சரவை இணைப் பேச் சாளர் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மத்தியஸ்த ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து தமிழ் மக்களும் விட்டுக்கொடுத்துவரும் இந்த தருணத்தை நழுவவிட்டால் இன்னுமொரு சந்தர்ப்பம் வரும் என எதிர்பார்க்க முடியாது என்றும் கூறிய அமைச்சர், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து மகாநாயக்க தேரர்களுடன் ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன விரைவில் கலந்துரையாடுவார் என்றும் தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு மகாநாயக்க தேரர்களும், தென்னிலங்கை கடும்போக்குவாத அரசியல் பிரமுகர்களும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
அதேபோல மைத்திரி ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசு புதிய அரசமைப்பின் ஊடாக பௌத்த மதத்திற்கு முன்னுரிமை நீக்கப்படுவதாகவும், சமஷ்டி முறையூடாக ஒற்றையாட்சி நீக்கப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இவ்விடயம் தொடர்பாக கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தயாசிறி ஜயசேகர தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்கள் என்ற வகையில் புதிய அரசரமைப்பு குறித்து பிரச்சினை இருந்தால் அதனை தீர்த்து முன் செல்லவேண்டும்.
விடுதலைப் புலிகளின் ஆலோசகர்களாக இன்றும் சிலர் வடக்கில் செயற்படுகின்றனர். இதற்கு வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளும் சிக்கியிருக்கின்றனர்.
மத்தியஸ்த நிலையிலுள்ள சுமந்திரன், சம்பந்தன் உள்ளிட்டவர்களும் வடக்கில்தான் இருக்கின்றனர்.
பொதுஜன ஐக்கிய முன்னணி முன்னர் அரசியலமைப்பு யோசனையை கொண்டுவந்தபோது அவற்றை ஐக்கிய தேசியக் கட்சி தீயிட்டு கொளுத்தியது.
இப்போது இருகட்சிகளும் அதேபோல ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகளும் இணை ந்து இடைக்கால அறிக்கையை தயாரித்து ள்ளோம்.
அது இறுதி அரசியலமைப்பு அல்ல. ஒற்றையாட்சி மற்றும் பௌத்த மதத் திற்கு முன்னுரிமை ஆகிய விடயங்கள் குறி த்து இன்னும் பேசிவருகின்றோம்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்த வழியை விட்டு வேறு வழியொன்று இருக்கி ன்றது என்று யாராவது முன்மொழிந்தால் அதனையும் செய்ய நாங்கள் தயார். ஏனென்றால் தமிழ் மக்களுடன் பேச்சுநடத்தி இணைந்து தீர்வுகாண்பதற்கு இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் வேறு தருணம் கிடைக்காது. தேசியப் பிரச்சினைக்கு தீர்வை தமிழ் மக்கள் துப்பாக்கி ஊடாக கேட்டார்கள்.
அது முடிந்துவிட்டது. இன்று இனவாத ரீதி யில் அதனை முற்றுப்பெறச் செய்ய முயற்சித் தால் மீண்டும் மீண்டும் மோதலே தோற்றம் பெறும். தமிழ் மக்களுக்கு பிரச்சினை இருக் கிறது.
இலங்கையை ஒருமித்த நாடாக வைத்து அதனூடாக அந்தப் பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு முயற்சிக்கின்றோம்.
அதற்கு தமிழ் மக்களும் விருப்பம் வெளியிட்டுள்ள னர். இதனை நழுவவிட்டு வடக்கில் மீண்டும் விடுதலைப் புலிகளது செயற்பாடுகள் ஆர ம்பித்து மத்தியஸ்த ஜனநாயகவாதிகள் இல்லா தொழிக்கப்பட்டு நாடு தீப்பற்றி எரிய இடமளிப்பதா என்பதையே கேட்கின்றேன் என்றார்.
இதேவேளை புதிய அரசியலமைப்பு ஒன்று தேவையில்லை என்று மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதேபோல புதிய அரசியலமைப்பிற்கு ஆதரவு வழங்கு வோரை கொலை செய்ய வேண்டுமென இலங்கை இராணுவத்திலிருந்த மூத்த படைய திகாரிகளில் ஒருவரான ஜெனரல் கமால் குணரட்ன கூறியிருக்கின்றார்.
மேலும் புதிய அரசமைப்பை நிறைவேற்ற விடாமல் நாடாளு மன்றத்திற்கு குண்டு வைப்பதாக நாடாளு மன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார். இப்படியான நிலையில் அரசாங்கம் எவ்வாறு அதனை நிறைவேற்றப்போகிறது என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் தயாசிறி ஜயசேகர “புதிய அரசியலமைப்பு இன்னும் உருவாக்கப்பட்டு பூர்த்தி செய்ய ப்படவில்லை.
அரசியல் கட்சிகள், அமைப்புக் களின் யோசனைகளே அரசியலமைப்புச் சபை ஊடாக குழுக்களுக்கு முன்பாக சமர்ப் பிக்கப்பட்டுள்ளன. அதில் பலரும் பலவித யோசனைகளை முன்மொழிந்துள்ளனர்.
இருப்பினும் சிங்கள பௌத்தன் என்ற வகையில் நாட்டைக் காட்டிக்கொடுக்க நாங்கள் இட மளிக்கப்போதில்லை. அரசியலமை ப்பு யோசனைகளை நிறைவேற்றி இறுதிப்படுத்தும்போது ஜனாதிபதி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆலோசனைப் பெற்றுக் கொள்வார்.
அரசியலமைப்பு என்பது நாட்டை முன்னோக்கிப் பயணிக்க உதவிசெய்யும் விடயமாகும்.
நாட்டை குழப்புவதல்ல. இன்று குழப்பம் விளைவிப்போரும், அப்படியான பிரசாரங்களை செய்வோர் யுத்தத்திலும் இப்படித்தான் செயற்பட்டார்கள் என்று அறி ந்துகொள்ள முடியும். அரசியலமைப்புக்கு ஆதரவளிப்போரை கொலை செய்வதாக கூறியவர்கள் போரை எவ்வாறு முன்னெடுத் திருப்பார்கள் என்று உணரமுடியும்.
நாடாளு மன்றத்திற்கு குண்டு வைப்பதாக விமல் வீரவன்ச கூறியுள்ளார். எனவே இனவாத ரீதியில் பிரச்சினைகளை தீர்க்க முயற்சித்தால் மீண்டுமொரு மோதலே உருவாகும். அப்படி உருவாகினால் தமிழ் மக்கள் சர்வதேசத்திடம் சென்று சிங்கள மக்களுடன் எமது பிரச்சினையை தீர்க்க முடியவில்லை, சர்வதேச உதவி வேண்டும் என்பார்கள்.
அந்த இடத்திற்கு நாட்டை தள்ளிவிட எம்மால் இடங்கொடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

Reviewed by Author
on
October 27, 2017
Rating:

No comments:
Post a Comment