அண்மைய செய்திகள்

recent
-

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா-(படங்கள் )

மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த 30 ஆம் திகதி சனிக்கிழமை கல்லூரியின் முதல்வர் எஸ். செல்வரஞ்சன் தலைமையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

குறித்த விழாவிற்கு பிரதம விருந்தினராக பாடசாலையின் பழைய மாணவரும் இலங்கை சுங்கத்திணைக்களத்தின் பிரதி சுங்க அத்தியட்சகருமான சஹாப்தீன் லுக்மான் கலந்து சிறப்பித்ததோடு கௌரவ விருந்தினராக மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி. சுகந்தி செபஸ்ரியான், மற்றும் பள்ளிவாசல்களின் நிர்வாக சபை தலைவர்கள் ,பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள்,பெற்றோர்கள்,நலன் விரும்பிகள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது 2015ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டு காலப் பகுதியில் இணைப்பாட விதான செயற்பாடுகளில் மாவட்ட, மாகாண மற்றும் தேசிய ரீதியில் சாதனை புரிந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதோடு, பாடசாலை மட்டத்தில் வகுப்பு ரீதியில் சிறந்த மாணவருக்கான விருதும், பாட ரீதியல் முதல் 3 இடங்களைப்பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அத்துடன் 2016ம் ஆண்டு பல்கலைக்கழகம் சென்ற மாணவர்களும் இதன் போது கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது பாடசாலைக்கு சுமார் 40 இலட்சம் பெறுமதியான பேருந்து பழைய மாணவர் சங்கத்தின் முயற்சியினால் அன்பளிப்பு செய்யப்பட்டது.

மேலும் கல்லூரியின் முதல்வர் திரு.எஸ்.செல்வரஞ்சன் கல்லூரியினை 2015 ஆம் ஆண்டு பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரையான காலப்பகுதியில் பாடசாலை பல்வேறு துறைகளில் அடைவுகள் எட்டப்பட்டதை கௌரவித்து அதிபர் அவர்களுக்கு பிரதம அதிதியினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






சிறப்பாக இடம் பெற்ற மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா-(படங்கள் ) Reviewed by NEWMANNAR on October 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.