மன்.சித்திவிநாயகர் தேசிய இந்துக்கல்லூரி மாணவி ச.லக் ஷாயினி புலமைப்பரீட்சையில் மன்னார் மாவட்டத்தில் 3இடம்...
2017ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேற்றுன்படி
மன்.சித்திவிநாயகர் தேசியஇந்துக்கல்லூரி மாணவி செல்வி சதீஸ்குமார் லக் ஷாயினி புலமைப்பரீட்சையில் 184 புள்ளிகளைப்பெற்று மன்னார் மாவட்டத்தில் 3மிடத்தினை பெற்றுளார்.
நாயகி செல்வி சதீஸ்குமார் லக் ஷாயினிஉங்களது எதிர்கால இலக்கு என்ன எனவினாவியபோது மருத்துவராக வருவேன்....
பரீட்சைக்கு எவ்வாறு படித்தீர்கள் நான் காலையில்
படிப்பேன் பாடசாலையில் ஆசிரியர் G.பிரதீபன் படிப்பதை
அப்படியே விளங்கிப்படிப்பேன் அவ்வளவுதான் மேலதிக வகுப்புக்களுக்கு
போறதில்லை பாடசாலையில் ஆசிரியர் மிகவும் நல்ல முறையில் கற்றுத்தந்தார. என்னைப்போல்
விரும்பி ஆர்வமாகப்படித்தால் எனிபரீட்சை எழுதவிருக்கும் எல்லாமணவர்களும்
சித்தியடையலாம் எனது வெற்றிக்கு காரணமான பெற்றோர் V.சதீஸ்குமார் மதியரசி மற்றும் ஆசிரியர் G.பிரதீபன் அதிபர் T-தனேஸ்வரன் அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன்.
என்னை வழிநடத்தும் இறைவனையும்.
ஆசிரியர் G.பிரதீபன் அவர்களிடம் வினவியபோது-
உண்மையில் நன்கு திறமையுள்ள பிள்ளை படிப்பிக்கும் போது நன்கு உற்றுக்கவனிப்பாள் மாவட்டமட்டத்தில் முதலாம் இடம் வருவாள் என உறுதியாக நம்பி இருந்தேன். ஆனால் 3ம் இடத்தினைப்பெற்றுள்ளால் சற்று எமாற்றம் தான் இருப்பினும் மகிழ்ச்சி 07புள்ளிகள் பெறவேண்டிய கேள்விகளை கவனயீனமாக மாறி எழுதியுள்ளால் 184 உடன் விடுபட்ட 07புள்ளிகளையும் சேர்த்தால் முதல் இடம் கட்டாயம் கிடைச்சிருக்கும் தனே,,, மாணவிக்கு வீட்டில் பெரிதாக கற்றுக்கொடுப்பதற்கு யாருமே இல்லை தாயார் ஆரம்பப்பாடசாலை ஆசிரியராக இருந்தாலும் பரீட்சைக்காலத்தில் சுகவீனமுற்றிருந்தார் பாடசாலையில் கற்றுக்கொண்டவற்றோடு தனது ஞாபகசக்தியால் பெற்றுக்கொண்ட வெற்றியே ஆகும்.
மன்.சித்திவிநாயகர் தேசியஇந்துக்கல்லூரி
- தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை-78
- 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்கள்---74
- விகிதாசாரம்-95%
- புலமைப்பரீட்சையில் தகமை பெற்றோர்---16
மன்னார்
மாவட்டத்தின் பெருமையை நிலைநாட்டுகின்ற மாணவச்செல்வங்களினையும்
அவர்களுக்கும் பயிற்சியளிக்கும் ஆசிரியர்களுக்கும் அதிபர் அவர்களுக்கும்
உறுதுணையாக இருக்கும் பெற்றோர் பாடசாலைச்சமூகத்தினருக்கும் நியூமன்னார்
இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்;
தொகுப்பு-வை-கஜேந்திரன்-
மன்.சித்திவிநாயகர் தேசிய இந்துக்கல்லூரி மாணவி ச.லக் ஷாயினி புலமைப்பரீட்சையில் மன்னார் மாவட்டத்தில் 3இடம்...
Reviewed by Author
on
October 09, 2017
Rating:
Reviewed by Author
on
October 09, 2017
Rating:




No comments:
Post a Comment