ஜப்பானில் பொதுமக்களை இடம்பெயருமாறு அறிவுறுத்தல்
ஜப்பானின் கரையோரப் பகுதிகளை ‘லான்’ சூறாவளி தாக்கியுள்ளதைத் தொடர்ந்து, அப்பகுதிகளை அண்டி வசிக்கும் மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சுமார் 10 ஆயிரம் பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலைமைக்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஜப்பானில் கடும் மழையுடன் லான் எனும் சூறாவளி இன்று ஞாயிற்றுக்கிழமை தாக்கியுள்ளது. மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய லான் சூறாவளி, தெற்கு ஜப்பானிலிருந்து வடகிழக்கு ஜப்பானுக்கு நகர்ந்து செல்வதாக வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், மத்திய மற்றும் கிழக்கு ஜப்பானில் நாளை திங்கட்கிழமை அதிகாலை வேளையில் மணிக்கு 162 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜப்பானில் கடும் மழை காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுகின்றது.
எனவே, பொதுமக்களை முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் வானிலை நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
ஜப்பானில் லான் சூறாவளி தாக்கியுள்ளதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான விமான சேவைகளும் ரயில் சேவைகளும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
ஜப்பானில் பொதுமக்களை இடம்பெயருமாறு அறிவுறுத்தல்
Reviewed by Author
on
October 23, 2017
Rating:

No comments:
Post a Comment