பூரண ஹர்த்தாலினால் முடங்கிப் போன வடமாகாணம்!
வடமாகாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் ஹர்த்தால் காரணமாக அந்தப் பகுதி முற்றாக செயலிழந்துள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி தமிழ் அரசியல் கட்சிக் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து இன்று ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் பேரவை, உட்பட 19 அரசியல் அமைப்புகள் மற்றும் 50 சிவில் அமைப்புகள் ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவு வழங்கியுள்ளன.
வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடையடைப்பு செய்யப்பட்டுள்ளது.
ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து வடமாகாணம் முழுவதும் பயணிக்கும் தனியார் பேருந்துகளும் போக்குவரத்தினை நிறுத்தியுள்ளது. எனினும் அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. எனினும் நகர பகுதி பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமூகமளிக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
பூரண ஹர்த்தாலினால் முடங்கிப் போன வடமாகாணம்!
Reviewed by Author
on
October 13, 2017
Rating:

No comments:
Post a Comment