சாகும் வரையில் தமிழ் அரசியல் தைிகள் உண்ணாவிரதம்! கூட்டமைப்பு நாடாளுமன்றில் விடுத்த கோரிக்கை....
அநுராதபுரம் சிறைச்சாலையில் சாகும் வரையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் உடன் கவனமெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்களநாதன் இந்த கோரிக்கையினை நாடாளுமன்றில் இன்று முன்வைத்துள்ளார்.
வவுனியா மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்த வழக்கு விசாரணைகள் தற்போது அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவர் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம், சட்டமா அதிபர் திணைக்கம் உள்ளிட்ட தரப்புகள் அவதானம் செலுத்தி அவர்களுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும். அத்துடன் குறித்த மூவரினதும் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சாகும் வரையில் தமிழ் அரசியல் தைிகள் உண்ணாவிரதம்! கூட்டமைப்பு நாடாளுமன்றில் விடுத்த கோரிக்கை....
Reviewed by Author
on
October 10, 2017
Rating:
Reviewed by Author
on
October 10, 2017
Rating:


No comments:
Post a Comment