நில ஆக்கிரமிப்பிற்கு செல்வம்-சுமந்திரன் ஆதரவா? சுரேஸ் கேள்வி
தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரனும் செல்வம் அடைக்கலநாதனும் தமிழர் பகுதிகளை சிங்களமயமாக்குவதற்கு உடந்தையாக செயற்படுகின்றனரா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமசந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நல்லாட்சி என்கின்ற இந்த அரசாங்கத்தில் கூட எந்தவித மாற்றங்களுமின்றி மகிந்த அரசாங்கம் எவ்வாறு தமிழ் மக்களிற்கு விரோதமான செய்ததோ அந்த நிகழ்வுகளை இவர்களும் செய்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிகழ்வுகளில் சுமந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளமையானது தமிழ் பிரதேசங்களை சிங்கள பிரதேசமாக்குவதற்கு அரசாங்கத்திற்கு அவர்கள் துணைபோகின்றனரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என சுரேஸ்பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழரசுக்கட்சி கண்மூடித்தனமாக இவ்வாறான விடயங்களை கையாள்கின்றது தமிழ் மக்களிற்கு விரோதமான செயல்களை முன்னெடுக்கின்றது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ் மக்களிற்கு முக்கியமான விடயங்களில் தற்போதைய அரசாங்கம் தன்னை மாற்றிக்கொள்ளாமல் இறுக்கமான நிலைப்பாடடை கடைப்பிடிக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நில ஆக்கிரமிப்பிற்கு செல்வம்-சுமந்திரன் ஆதரவா? சுரேஸ் கேள்வி
Reviewed by NEWMANNAR
on
October 23, 2017
Rating:

No comments:
Post a Comment