அண்மைய செய்திகள்

recent
-

ஜெயலலிதா தாய்மை அடைந்திருந்த போது அவசரமாக வரச் சொன்னார்! -


ஜெயலலிதாவுக்கு மகள் பிறந்தது உண்மை என்று பெங்களூருவில் உள்ள அவரின் உறவினர் லலிதா பேசியது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக லலிதாவை பெங்களூரில் சந்தித்த போது அவர் கூறியதாவது,
சினிமாவில் இருந்த வரைக்கும் ஜெயலலிதாவுடன், எங்களுக்கு நல்ல தொடர்பு இருந்தது. ஆனால், அரசியலுக்கு வந்த பிறகு அவருக்கும் எங்களுக்குமான தொடர்பு நின்று போனது.
அதன் பின்னர், எங்க பெரியம்மா ஜெயலட்சுமி மட்டும் அவருடன் அவ்வப்போது பேசிக்கொண்டிருந்தார்.

இந்தச் சூழலில், அவரின் தாயார் சந்தியா இறந்த பிறகு ஒரு சமயம் எங்க பெரியம்மாவை, ஜெயலலிதா அவசரமாக அழைத்திருந்தார்.
என் பெரியம்மா சென்று பார்த்த போது ஜெயலலிதா தாய்மை அடைந்து இருந்துள்ளார். இதையடுத்து, ஜெயலலிதாவுக்கு, அவர்தான் பிரசவம் பார்த்து விட்டு வந்துள்ளார்.
இதை பெரியம்மா, என் தாயாரிடம் சொன்னதும் அவர் கோபம் அடைந்து விட்டார். ஏன் என்றால் எங்க மாமா ஜெயராமன் (ஜெயலலிதாவின் தந்தை) இறந்த பிறகு, எங்க அம்மாவுக்கு, ஜெயலலிதா குடும்பத்தினரைச் சுத்தமாகப் பிடிக்காது.
அந்தக் குழந்தை சோபன்பாபுக்கும் ஜெயலலிதாவுக்கும் பிறந்த குழந்தை என்று பெரியம்மா எங்களிடம் கூறினார். அந்தக் குழந்தைதான் அம்ருதாவா என்று எனக்குத் தெரியாது.
டி.என்.ஏ சோதனைதான் அதைத் தெளிவுபடுத்த வேண்டும்’ என்றார் தெளிவாக.

இறந்து ஓராண்டு கழித்து ஜெயலலிதாவின் உடலை மரபணு சோதனை செய்ய முடியுமா?
ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு நான்தான். நான் அவரின் மகள் என்பதைச் சட்டபூர்வமாகவும் பரிசோதனைகள் மூலமாகவும் கண்டிப்பாக நிரூபிப்பேன்’’ என்கிறார் பெங்களூரு கெங்கேரியைச் சேர்ந்த அம்ருதா.
நான் 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி ஜெயலலிதா-சோபன்பாபு தம்பதியருக்கு மகளாகப் பிறந்தேன். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால், தனக்கு அவப்பெயர் ஏற்பட்டு விடும் என்பதற்காக ஜெயலலிதா தன் சகோதரியான சைலஜாவிடம் கொடுத்து வளர்த்தார்’’ என்று பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் அம்ருதா.
இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் அம்ருதா தொடர்ந்த வழக்கை, நீதிபதி மதன் பி லோகூர் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது. ஆனால், இது தொடர்பாக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து கொள்ளலாம் என்று அனுமதியளித்திருக்கிறது.

இவ்வளவு காலம், ஜெயலலிதாவைத் தன் பெரியம்மா என்று சொல்லி வந்த அம்ருதா, இப்போது 'அம்மா' என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார். அதற்காக மரபணு (DNA) பரிசோதனைக்கும் தயார் என்கிறார்.
ஜெயலலிதாஇறந்து ஒரு வருடம் ஆன ஒருவரின் டி.என்.ஏ-வைப் பரிசோதிக்க வாய்ப்பிருக்கிறதா? தடவியல் நிபுணர்கள் விளக்கிக் கூறியதாவது,


இறந்து போன ஒருவரின் தலை முடியை வைத்து, அவர் இறந்து எத்தனை வருடங்கள் ஆகியிருந்தாலும், அவரின் வயதைக் கண்டறியலாம். இறக்கும்போது அவருக்கு என்ன வயது என்பதையும் கண்டறியலாம்.
இறந்து போன ஒருவரின் உடலிலிருந்து எடுத்த இரத்த மாதிரிகளையோ, திசுக்களையோ வைத்து டி.என்.ஏ பரிசோதனை செய்ய முடியும். அதன் மூலம் வாரிசு சோதனை (Paternity testing) செய்து கொள்ளலாம்.
இறந்துபோன சில நாள்களில், அதுவும் இறந்தவரின் உடல் புதைக்கப்பட்டிருந்தால், அதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. இறந்து பல மாதங்கள், வருடங்கள் ஆகிவிட்டால் வாய்ப்பு குறைவு. ஆனால் வாய்ப்பே இல்லை என்று சொல்ல முடியாது. 

உடல் மண்ணில் புதைக்கப்பட்டிருந்தால் கடினம். ஆனால், பெட்டியில் வைக்கப்பட்ட உடல்கள் என்றால் வாரிசு சோதனைக்கு வாய்ப்பிருக்கிறது.
ஜெயலலிதாவின் உடல் பெட்டியில் வைத்துத்தான் புதைக்கப்பட்டிருக்கிறது. பெட்டியில் வைக்கப்பட்ட உடல் முழுவதுமாகச் சிதைந்து போயிருக்க வாய்ப்பில்லை.
எலும்புகளில் படிந்திருக்கும் இரத்தத்துளிகளைக் கொண்டு மரபணு சோதனை செய்யலாம், ஏற்கெனவே அவருடைய இரத்த மாதிரி ஏதாவது சேகரித்து வைக்கப்பட்டிருந்தால், அதைக்கொண்டும் வாரிசு சோதனையைச் செய்யலாம்" என்கிறார்கள் நிபுணர்கள்.
- Vikatan-
ஜெயலலிதா தாய்மை அடைந்திருந்த போது அவசரமாக வரச் சொன்னார்! - Reviewed by Author on November 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.