அண்மைய செய்திகள்

recent
-

வரலாற்று சிறப்புமிக்க மாத்தளை முத்துமாரியம்மனின் வரலாறு -


பண்ணகம் என அழைக்கப்பட்ட மாத்தளை மாநகரில் மிகப்பழைமையும், சிறப்பும் மிக்க ஆலயமாக ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் விளங்குகின்றது.
இலங்கையில் ஐந்து இரதங்களைக் கொண்டுள்ள மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கண்டியில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் மாத்தளை நகரப் பகுதியின் நடுவே அமைந்துள்ளது.
இலங்கையில் இந்த ஆலயமே ஐந்து இரதங்களைக் கொண்டுள்ளது. இலங்கையில் மிகவுயரமான 108 அடி உயரமான இராஜகோபுரமும் அமைந்துள்ள தலமும் இதுவே தான்.
ஆலய வரலாறு
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டத்துறைக்கு இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் அழைத்து வரப்பட்டபோது தலைமன்னார் ‘அரிப்பு’ இறங்கு துறையூடாக அழைத்து வரப்பட்டு மலையக தலைவாசலான பண்ணாகமம் என்று அப்போது அழைக்கப்பட்டு வந்த மாத்தளையை வந்தடைந்தனர்.
ஆதியில் மன்னாரிலிருந்து காட்டு வழியாக கால் நடையாக பெரும் துன்பப்பட்டு மாத்தளையை வந்தடைந்த மக்கள் இங்கிருந்து சிறு சிறு குழுக்களாக மலையக பெருந் தோட்டங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அப்படி பெருந்தோட்டங்களில் குடியேற்றப்பட்ட மக்களே இந்திய வம்சாவளி மக்களாவர். இம் மக்களது உழைப்பாலேயே மலையகம் இன்று செழிப்பாக இருக்கிறது.
இப்படி சிறு சிறு குழுக்களாக மலையகமெங்கும் வியாபித்த மக்கள் மாத்தளையிலும் குடியேறினர். எங்கும் வியாபித்து அடியவர்களுக்கு அருள்மழை பொழியும் அன்னை பராசக்தியான ஸ்ரீ முத்துமாரியம்பிகையானவள் ஒரு சிகை அலங்காரம் செய்யும் ஒருவரிடத்தில் கனவில் தோன்றி தன் திரு உருவத்தை ஒரு வில்வமரத்தடியில் வெளிப்படுத்தி தன்னை பூஜிக்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அன்றிலிருந்து அவ் வில்வ மரத்தடியில் சிலை வைத்து வணங்கி வந்ததாக ஆரம்ப கர்ண பரம்பரைக் கதைகளும் ஏடுகளும் சான்று பகர்கின்றன.
எழில்மிகு இயற்கை சூழலையும், பௌதீக வளங்களையும் கொண்ட பண்ணகாமத்தில் சிறு கொட்டில் அமைத்து வழிபட்ட ஆலயம் இன்று மாட மாளிகையாக வளர்ச்சி காணப்படுகின்றது.
இவ்வாலயத்தில் ஆரம்பத்தில் பூஜைகள் மட்டுமே நடைபெற்று வந்துள்ளன. பின்னர், படிப்படியாக திருவிழாக்களும் சப்பரத்தேர் எடுக்கும் வழக்கமும் தோன்றின.
வரலாற்று சிறப்புமிக்க மாத்தளை முத்துமாரியம்மனின் வரலாறு - Reviewed by Author on November 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.