தொடரும் அகதிகள் முகாம் மீதான தாக்குதல்: திடுக்கிடும் புள்ளிவிவரங்கள் -
ஜேர்மனியில் உள்ள அகதிகள் முகாம்கள் மீது கிட்டத்தட்ட எல்லா நாட்களும் தாக்குதல் நடத்தபடுவதாக புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இது சம்மந்தமாக மத்திய குற்றவியல் பொலிஸ் முகமை எடுத்துள்ள ஆய்வின் முடிவுகள் ஜேர்மனியின் Neue Osnabrucker Zeitung பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் 211 அகதிகள் தங்குமிடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதுமட்டுமில்லாமல் அக்டோபர் 23-ஆம் திகதி வரை 15 சம்பவங்கள் தனியாக நடந்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டில் இது 900 ஆக இருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது. ஆனாலும் 2014-ஆம் ஆண்டை விட இவ்வருடத்தில் அதிக தாக்குதல்கள் நடந்ததுள்ளது.
கடந்த 2015-ல் பல்வேறு நாடுகளை சேர்ந்த 1 மில்லியனுக்கும் அதிகமான அகதிகளை சான்சிலர் ஏஞ்சலா மெர்கல் ஜேர்மனிக்குள் அனுமதித்தார்.
இது உள்நாட்டில் சர்ச்சைகளை கிளப்பினாலும், வெளிநாடுகளில் மெர்கலுக்கு பாராட்டுகளை வாங்கி கொடுத்தது.
இந்த நிலையில் தான் ஜேர்மனி அகதிகள் முகாம்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடந்து வருகிறது.
தாக்குதல்களின் எண்ணிக்கை நிலையான அளவில் உள்ளதாகவும், ஒரு காலாண்டுக்கு சராசரியாக 70 தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்படுவதும், அகதிகளின் பொருட்கள் சேதமடைவதும் அதிகம் நடக்கிறது.
தொடரும் அகதிகள் முகாம் மீதான தாக்குதல்: திடுக்கிடும் புள்ளிவிவரங்கள் - 
 Reviewed by Author
        on 
        
November 07, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
November 07, 2017
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
November 07, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
November 07, 2017
 
        Rating: 

 
 
 

 
.jpg) 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment