இந்தியப் பெருங்கடலில் தத்தளித்த இலங்கையர்கள்! போராடிக் காப்பாற்றிய ஈரானிய கப்பல் -
இந்தியப் பெருங்கடலில் படகு கவிழ்ந்த நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் ஐந்து பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.குறித்த ஐவரையும் ஈரானிய எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்று காப்பாற்றியுள்ளதாக இர்னா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் படகு கவிழ்ந்த நிலையில் அதன் மீது ஏறி நின்று ஐந்து இலங்கை மீனவர்களும் உதவி கோரியுள்ளனர். இந்த மீனவர்களை மீட்கும் போராட்டம் சுமார் ஐந்து மணிநேரம் நீடித்ததாக, ஸ்ட்ரீம் என்ற எண்ணெய்த் தாங்கி கப்பலின் தலைவர் மஹ்மூத் பக்கெஸ்தானி தெரிவித்துள்ளார்.
மீனவர்களை நாளை மறுநாள் சபஹார் துறைமுகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த மீனவர்கள் 2 அல்லது 3 நாட்களாக கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியப் பெருங்கடலில் தத்தளித்த இலங்கையர்கள்! போராடிக் காப்பாற்றிய ஈரானிய கப்பல் -
Reviewed by Author
on
December 04, 2017
Rating:

No comments:
Post a Comment