இலங்கையை நெருங்கும் ஆபத்து! கவனமாக செயற்படுமாறு எச்சரிக்கை -
அந்தமான் தீவுக்கு அருகில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியாவை நோக்கி நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து கிழக்கு பகுதியின் 1350 கிலோ மீற்றர் தூரத்தில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் நிலை கொண்டுள்ளது. இந்த தாழமுக்கம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மூன்று நாட்களில் தாழமுக்கம் மேல் திசையை நோக்கி பயணித்து வங்காள விரிகுடா கடல் பிரதேசம் ஊடாக இந்தியாவை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் இலங்கைக்கு நாளை பாதிப்பு ஏற்படும் எனவும், இது தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் செயற்படுமாறும் பொது மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
தாழமுக்கம் தொடர்பில் எதுவித மாற்றங்கள் ஏற்பட்டால் உடனடியாக அறிவிக்கப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதனால் மீனவ மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதற்கமைய நாளை மற்றும் நாளை மறுதினம் நாடு முழுவதம் அடை மழை பெய்யும் எனவும் மண் சரிவுகள் தொடர்பில் அவதானத்தை செலுத்துமாறும் பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களில் வெளியாகும் அனர்த்த முகாமைத்துவ தகவல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையை நெருங்கும் ஆபத்து! கவனமாக செயற்படுமாறு எச்சரிக்கை -
Reviewed by Author
on
December 04, 2017
Rating:

No comments:
Post a Comment