அண்மைய செய்திகள்

recent
-

சுவிஸில் ஓராண்டிற்கு 4700 பேர் மாயமாகும் மர்மம் -


சுவிட்சர்லாந்தில் ஓராண்டிற்கு 4700 பேர் காணாமல் போவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சுவிஸில் ஆண்டுக்கு சுமார் 4,700 பேர் காணாமல் போவதாக SonntagsZeitung எனும் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
SonntagsZeitung எனும் நாளிதழ், காணாமல் போனவர்கள் குறித்து சுவிஸில் உள்ள 13 மண்டலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு நாளைக்கு 13 பேர் என்ற விகிதத்தில், ஓராண்டுக்கு 4,700 பேர் காணாமல் போவதாக தெரியவந்துள்ளது.
அதில் பெரும்பாலானோர் 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். இந்நிலையில், இவ்வாறு காணாமல் போனவர்களை தேடும் பணியில், உள்ளூர் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

அதாவது, உள்ளூர் அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பாக, 2.8 சதவித அளவிலேயே மக்களிடம் உதவி கோருகிறார்கள். அதுவும், காணாமல் போன நபர் ஒரு குழந்தையாகவோ அல்லது வயதான உடல்நிலை பாதிக்கப்பட்டவராகவோ இருந்தால் தான் என்று கூறப்படுகிறது.
கடந்த 2017ஆம் ஆண்டில், ஜெனீவா மாகாணத்தில் 1,668 பேர் காணாமல் போயுள்ளனர். ஆனால் அவர்களில் 5 பேருக்கு மட்டுமே முறையான தேடலை பொலிசார் மேற்கொண்டிருந்தனர்.

இதேபோல, சூரிச் மாகாணத்தில் காணாமல் போன 288 பேரில், 11 பேரை மட்டுமே தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டதாகவும், Ticino நகரில் காணாமல் போன 83 பேரில் 33 பேரை மட்டுமே கண்டுபிடிக்க அதிகாரிகள் முயற்சித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸில் ஓராண்டிற்கு 4700 பேர் மாயமாகும் மர்மம் - Reviewed by Author on January 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.