புதுக்குடியிருப்பு மக்களுக்கு நேர்ந்த பரிதாபம்!
புதுக்குடியிருப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இரா.சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் பங்கேற்கும் பரப்புரை கூட்டத்திற்கு சென்ற மக்கள் தீவிர சோதனைக் கெடுபிடிக்கு உட்படுத்தப்பட்டிக்கின்றனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
புதுக்குடியிருப்பு ஐயன்கோவிலுக்கு அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கான தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடைபெறுகின்றது.
இந்த நிகழ்விற்காக அழைக்கப்பட்ட மக்கள் பொலிஸாரின் தீவிர சோதனைக் கெடுபிடிகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
குழந்தைகளுடன் செல்லும் தாய்மார் முதியவர்கள் உட்பட அனைவரும் தீவிர உடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இது குறித்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இளைஞர்களின் எழுச்சியால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலத்த நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறது.
பிரதேசத்தில் “வண்டில்” சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களையும் ஆதரவாளர்களையும் பிரதேசத்தில் கூட்டமைப்பின் ஊடாக போட்டியிடுபவர்களும் அவர்களுடைய நெருக்கத்துக்குரியவர்களும் எதிரிகளாப் பார்க்கின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது.
சமூகவலைத்தளங்களிலும் நேரடியாகவும் கடும் வார்த்தைப் போர் இடம்பெற்றுவருகின்றது.
இந்த நிலையில் புதுக்குடியிருப்பு இளைஞர்களின் எழுச்சியினால் அச்சமடைந்த கூட்டமைப்பினர் தங்களின் பரப்புரைக் கூட்டம் தொடர்பில் அச்சம் கொண்டே பொலிஸாரை வரவழைத்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய மாவட்டங்களில் இவ்வாறான கூட்டங்கள் நடைபெற்றபோதிலும் பொலிஸார் சோதனைக் கெடுபிடிகளை மேற்கொண்டிருந்தமை தொடர்பிலான செய்திகள் வெளியாகிருக்கவில்லை.
இந்த நிலையில் சுயேட்சை ஊடாக “வண்டில்” சின்னத்தின் செயற்பாட்டாளர்களை தொடர்புகொண்டு கேட்டபோது, ஜனநாயக ரீதியிலான மாற்றத்தை நோக்கியே சுயேட்சைக்குழு போட்டியிடுவதால் வன்முறை ரீதியான கேவலமான கைங்கரியங்களில் ஈடுபடும் எண்ணத்தை உடையவர்கள் எவரும் எமது பக்கம் இல்லை என்றும்,
வீரத்துக்கும் தியாகத்துக்கும் உரமாக விளங்கிய எமது புதுக்குடியிருப்பு பிரதேச மக்களை தீவிரவாதிகள் போல எண்ணி சோதனைக் கெடுபிடிக்கு உட்படுத்தும் நடவடிக்கை மிகக் கேவலமான செயற்பாடு என்றும் தமது கண்டனைத்தையும் பதிவு செய்தனர்.
tamilleader
புதுக்குடியிருப்பு மக்களுக்கு நேர்ந்த பரிதாபம்!
Reviewed by Author
on
January 29, 2018
Rating:

No comments:
Post a Comment