அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு மக்களை ஈர்க்க இராணுவத்தினர் போடும் திட்டம்! காரணத்தை கூறும் சி.வி -


வடமாகாணத்தில் தொடர்ந்தும் இராணுவத்தை நிலைநிறுத்தி வைத்திருப்பதே நோக்கமாகும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதற்காக இராணுவத்தினர் பொதுமக்களுக்கு உதவும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “வீடுகள் மற்றும் மலசலகூடங்களைக் கட்டிக்கொடுத்தல் போன்ற செயற்பாடுகளின் மூலம் மக்களின் மனதைக் கவருவதற்கான நடவடிக்கைகளை இராணுவம் முன்னெடுத்து வருகிறது.
இதன்மூலம் தொடர்ந்தும் வடமாகாணத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளில் இராணுவத்தினர் ஈடுபடுகின்றனர்.

எமது மக்களைக் கொன்றொழித்த, பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய, தமிழ் மக்களின் பொருட்களைச் சூறையாடிய அதே இராணுவத்தினர் தற்போது புதய முகம் ஒன்றுடன் வந்துள்ளனர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இத்திட்டத்தை உருவாக்கியமைக்காக தற்போதைய இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்கவை நான் வாழ்த்த வேண்டும்.
எங்களால் எமது மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்கான போதியளவு நிதி வளத்தைக் கொண்டிராமையால் இவர்களுக்கு சிறிலங்கா இராணுவத்தால் வழங்கப்படும் வீட்டுத் திட்டங்கள் மற்றும் ஏனைய திட்டங்களை நாம் மறுக்கமாட்டோம் என்பதை இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க நன்கறிந்துள்ளார்.
ஆகவே ஒற்றையாட்சி முறைமை நீடிக்கும் வரை எங்களால் சிறிலங்கா இராணுவத்தை வெளியேற்ற இயலாது. எமக்கான சமஸ்டி நிர்வாக அலகைக் கொண்ட அரசியலமைப்பை உருவாக்குவதைத் தவிர்ப்பதற்கான பல்வேறு வழிகளை சிறிலங்கா அரசாங்கம் கண்டுபிடித்து வருகிறது.
எமக்கான பாதுகாப்பு மற்றும் நலன்களை எமக்கு வழங்கக்கூடிய சமஸ்டி நிர்வாக முறைமை கொண்டுவரப்படாவிட்டால், சிறிலங்கா இராணுவத்தினர் தொடர்ந்தும் எமது பிரதேசங்களை ஆக்கிரமித்துக் கொண்டேயிருப்பார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.
வடக்கு மக்களை ஈர்க்க இராணுவத்தினர் போடும் திட்டம்! காரணத்தை கூறும் சி.வி - Reviewed by Author on January 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.