அண்மைய செய்திகள்

recent
-

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கூட்டத்தின் மீது கண்வைத்துள்ள இலங்கை! -


கனடாவில் இடம்பெற்று வரும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வுகளை இலங்கை தூதரகம் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையின் 8 ஆவது கூட்டத்தொடர், கனடாவின் ரொரன்டோ நகரில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், குறித்த கூட்டத்தொடரை கனடாவில் உள்ள இலங்கை தூதரகம் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனி தமிழீழக்கொள்கைளை ஆதரித்து வரும் நிலையில், இந்த கூட்டத்தொடரை இலங்கை தூதரகம் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக அதிகாரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இந்த கூட்டத் தொடர் குறித்து, கனேடிய வெளிவிவகார அமைச்சிடம், இலங்கை வெளிவிவகார அமைச்சு அதிகாரபூர்வமாக எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கூட்டத்தின் மீது கண்வைத்துள்ள இலங்கை! - Reviewed by Author on January 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.