அண்மைய செய்திகள்

recent
-

15 வயதில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை -


தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் 23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான பிகர் ஸ்கேட்டிங் தனிநபர் பிரிவில் ரஷிய இளம் புயல் அலினா ஜாகிடோவா தங்கப்பதக்கம் வென்றார்.

ஐஸ்கட்டி மைதானத்தில் சக்கரத்துடன் கூடிய ஷூவை காலில் மாட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் வலம் வந்த ஜாகிடோவா, உடலை வில்லாக வளைத்து சாகசம் காட்டியதுடன் துள்ளிகுதித்து அந்தரத்தில் மூன்று தடவை சுழன்றடித்த விதம் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.
மொத்தம் 239.57 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்ததுடன், இந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் ரஷிய வீராங்கனை என்ற சிறப்பையும் 15 வயதான ஜாகிடோவா பெற்றார்.

மற்றொரு ரஷிய மங்கை 18 வயதான எவ்ஜெனியா மெட்விடேவா வெள்ளிப்பதக்கமும் (238.26 புள்ளி), கனடாவின் கேட்லின் ஒஸ்மான்ட் (231.02 புள்ளி) வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
ரஷிய அரசின் உதவியுடன் அந்த நாட்டு வீரர், வீராங்கனைகள் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக 2014-ம் ஆண்டு சோச்சியில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கின் போது குற்றச்சாட்டு கிளம்பியதால், இந்த குளிர்கால ஒலிம்பிக்கில் ரஷியா பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
இதனால் ஜாகிடோவா கழுத்தில் தங்கப்பதக்கம் அலங்கரித்த போது, ரஷிய தேசிய கொடிக்கு பதிலாக 5 வளையங்கள் கொண்ட ஒலிம்பிக் கொடியே ஏற்றப்பட்டது.
15 வயதில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை - Reviewed by Author on February 25, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.