அண்மைய செய்திகள்

recent
-

சோமாலியாவில் இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல் - 18 பேர் பலி


சோமாலியா நாட்டின் மொகடிசு நகரில் நிகழ்த்தப்பட்ட இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டனர்.


கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியா தலைநகர் மொகடிசுவில் உள்ள அரசு அலுவலகங்களை குறிவைத்து நேற்று அடுத்தடுத்து இரண்டு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இந்த இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் 18 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 20-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

முதல் தாக்குதல் தற்கொலைப்படை தீவிரவாதி காரில் வெடிகுண்டு பொருள்களை நிரப்பி வெடிக்கச் செய்தான்.

இரண்டாவது தாக்குதல் உள்ளூர் அரசு தலைமை அலுவலகங்களை குறி வைத்து நடத்தப்பட்டது. அரசு அலுவலகங்கள் அமைந்த பகுதியில் இருந்த சோதனை சாவடி மீது வெடிகுண்டுகள் நிரப்பிய காரை வெடிக்கச் செய்தான்.

இந்த தாக்குதல்களுக்கு உடனடியாக எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

ஏற்கனவே, கடந்த அக்டோபர் மாதத்தில் மொகடிசு நகரில் அல் ஷபாப் தீவிரவாதிகள் வெடிபொருள் நிரப்பிய லாரியை வெடிக்க செய்ததில் சுமார் 500-க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சோமாலியாவில் இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல் - 18 பேர் பலி Reviewed by Author on February 24, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.