அண்மைய செய்திகள்

recent
-

ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகள் நடத்த தடை -


கிழக்கு மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளை பகல் ஒரு மணிவரை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி கலாச்சார அமைச்சு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திசாநாயக்காவினால் மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.
ஆளுநரின் பணிப்புரைக்கமைவாக ஞாயிறு தினங்களில் சமூக ஆன்மீக வளர்ச்சிக்கு நடாத்தப்படும் சமய வகுப்புகள் மாணவர்களுக்கு நன்மை பயக்கக்கூடியது. எனவே அன்று பகல் ஒரு மணிவரை தனியார் வகுப்புகளை நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

வலயத்திலுள்ள அதிபர்கள் தத்தமது பாடசாலைகளிலுள்ள ஆசிரியர்களுக்கு இதை அறிவிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகள் நடத்த தடை - Reviewed by Author on February 24, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.