அகதிகள் முகாமில் உணவு குறைப்பு: எழுந்த மோதலில் 27 பேர் கொலை -
ருவாண்டாவில் உள்ள அகதிகள் முகாமில் நிதி பற்றாக்குறையால் அகதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உணவை குறைத்தது தொடர்பாக எழுந்த மோதலில் ஐந்து அகதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
அகதிகளுக்கு போதிய உணவு வழங்கவில்லை என சுமார் 3,000 அகதிகள் செவ்வாய்க்கிழமை முதல் ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகாமிற்கு செல்லாமல் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுவந்துள்ளனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை போராட்டத்தை கலைக்க பொலிஸார் முயன்றுள்ளனர், அப்போது திடீரென கலவரம் ஏற்பட்டதால், அதை கட்டுப்படுத்த நாங்கள் பாதுகாப்புப் படைகளை பயன்படுத்துவோம் என்று போராட்டக்காரர்களை எச்சரித்த பின்னர் தான் தடியடி மூலம் நாங்கள் போராட்டத்தை கலைக்க முயன்றோம் என பொலிசார் தரப்பில் செய்தியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
கற்கள், இரும்பு கம்பிகள் முதலானவற்றை கொண்டு ஆகதிகள் பாதுகாப்பு படையினரை தாக்கியதால் 7 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 20 அகதிகள் என மொத்தம் 27 பேர் கலவரத்தில் பலியாயினர்.
500 முதல் 700 ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு இருந்தனர் என்றாலும் அவர்களில் 15 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஆணையர் அதிக படைகளை பயன்படுத்தி கலவர சூழலைக் கட்டுப்படுத்துவும் இது குறித்து விசாரானை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
நிதி பற்றாக்குறையால் அகதிகளுக்கான உணவுவைக் குறைப்பதாக UNHCR ஏற்கனெவே தெரிவித்திருந்தது. ருவாண்டா அகதிகளுக்கு தேவையான 26.8 மில்லியன் ரூபாயில் வெறும் 2.5 மில்லியன் ரூபாய் மட்டுமே நிதி கிடைப்பதால் இன்னும் அதிகளவு உணவு குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அகதிகள் முகாமில்  உணவு குறைப்பு: எழுந்த மோதலில் 27 பேர் கொலை -
 Reviewed by Author
        on 
        
February 26, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
February 26, 2018
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
February 26, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
February 26, 2018
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment