சிரியாவில் மடியும் குழந்தைகளுக்காக கேட்டது 30 நாள்..கொடுத்ததோ 5 மணி நேரம் மட்டுமே -
சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் அசாருக்கு எதிராக ஆயுதம் தாங்கி போரில் ஈடுபட்டு வரும், கிளர்ச்சிக்குழுக்கள், இராணுவத்தின் ஒரு பிரிவு ஆகியவற்றை ஒடுக்கும் பணியில் ஜனாதிபதி ஆதரவு படையினர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
6 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுச் சண்டையில் லட்சக்கணக்கான மக்கள் இதுவரை பலியாகியுள்ளனர்.
கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், ஜனாதிபதிக்கு ஆதரவாக ரஷ்ய படைகளும் சண்டையிட்டு வந்த நிலையில் கிளர்ச்சிக்குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ நிறுத்தியது.
இதனால், அரசுப்படையினரின் கை ஓங்கிய நிலையில், கடந்த 18-ம் தேதி முதல் ஜனாதிபதி ஆதரவு படை - ரஷ்யா இணைந்து கிழக்கு கூட்டா பகுதியில் ஆவேச தாக்குதல்களை நடத்தியது.
அரசு படை நடத்திய தாக்குதுலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதில் 120-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடங்குவர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்திருந்தது.
இச்சம்பவம் உலகையே உலுக்கி உள்ள நிலையில் கொத்து கொத்தாக குழந்தைகள் கொல்லப்பட்ட குழந்தைகள் தொடர்பான புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரது கண்களிலும் கண்ணீர் வரவழைத்தது.
இதனால் உலகநாடுகளில் உள்ள மக்கள் அனைவரும் சேவ் பார் சிரியா என்று கூறி அது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த, 24-ஆம் திகதி கூடிய ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சிரியாவில் 30 நாட்கள் போர் நிறுத்தம் செய்யும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்தது.
ஆனால் உள்ளூர் நேரப்படி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாக்குதல்கள் நடத்தப்படாது அதாவது 5 மணி நேரம் தாக்குதல் நடத்த மாட்டோம் என ஜனாதிபதி ஆதரவு மற்றும் ரஷ்ய படை தெரிவித்தது.
தினமும் 5 மணி நேரம் தாக்குதல் நிறுத்தப்பட்டாலும், கிழக்கு கூட்டா பகுதியில் 4 லட்சம் பொதுமக்கள் வரை இருக்கலாம் என்று கருதப்படுவதால், அவர்கள் இவ்வளவு விரைவில் வெளியேறுவது அவ்வளவு எளிதல்ல என்று கூறப்படுகிறது.
சிரியாவில் மடியும் குழந்தைகளுக்காக கேட்டது 30 நாள்..கொடுத்ததோ 5 மணி நேரம் மட்டுமே -
Reviewed by Author
on
February 28, 2018
Rating:

No comments:
Post a Comment