உள்ளூராட்சி மன்றங்களை நிறுவும் தினம் மீண்டும் பிற்போடப்பட்டது -
உள்ளூராட்சி மன்றங்களை நிறுவும் தினத்தை அரசாங்கம் மீண்டும் பிற்போட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி நிறுவ முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. பின்னர், அது 6ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது.
இந்த நிலையில்;, தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி உள்ளூராட்சி சபைகளை நிறுவும் திகதி பிற்போடப்பட்டதாக அமைச்சர் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களை நிறுவும் தினம் மீண்டும் பிற்போடப்பட்டது -
Reviewed by Author
on
February 28, 2018
Rating:

No comments:
Post a Comment