ஆப்கானிஸ்தான் பற்றி தெரிந்து கொள்ளலாம்! -
இது சில நேரங்களில் மத்திய கிழக்கு நாடாகவும், தெற்காசியாவின் நாடாகவும் நோக்கப்படுவது உண்டு. இந்நாட்டு எல்லையின் ஒரு பகுதியான பாகிஸ்தான், இந்தியாவால் உரிமை கோரப்படும் காசுமீரூடாகச் செல்கிறது.
இந்தியாவை வர்த்தகம் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களுக்காக மத்திய ஆசியாவுடன் இணைக்கும் பெருவழிப்பாதைகள் ஆப்கானித்தான் வழியே தான் செல்கின்றது.
1747 முதல் 1973 வரை ஆப்கானித்தான் ஒரு முடியாட்சி நாடாகவே இருந்தது. பின் சில படைத்துறை அதிகாரிகள், இந்நாட்டைக் கைப்பற்றிக் குடியரசாக அறிவித்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லைகள் எது?
ஆப்கானிஸ்தான் நாடு மேற்கே, ஈரானையும், தெற்கு மற்றும் கிழக்கில் சீனா மற்றும் பாக்கிஸ்தானையும், வடக்கே துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தாஜிக்ஸ்தான் போன்ற நாடுகளையும் தனது எல்லைகளாக கொண்டுள்ளது.ஆப்கானிஸ்தான் பெயர் ஏற்பட காரணம் என்ன?
ஆப்கானித்தான் என்பதன் நேரடிப் பொருள் ஆப்கானியரின் பூமி (நிலம்) என்று அர்த்தமாகும். இது அஃப்கான் என்ற சொல்லில் இருந்து உருவானது. பின் தற்கால வழக்கின் படி, அஃப்கான் எனும் சொல் மருவி ஆப்கானிஸ்தான் என்று பெயர் வந்தது.ஆப்கானிஸ்தான் நாட்டின் சிறப்புகள் என்ன?
ஆப்கானிஸ்தான் நாட்டில் 2,000 அண்டுகள் பழமையான புகழ்பெற்ற மிகப்பெரிய புத்தர் சிலை ஒன்று உள்ளது.வறட்சி மிகுந்த ஆப்கானிஸ்தான் நாட்டில் பனிப்பொழிவு என்பது மிக சாதரணமாக தான் இருக்கும். அதிலும் வடக்கு ஆப்கானிஸ்தானில் டிசம்பர்- பிப்ரவரி மாதத்தில் பனிப்பொழிவு ஏற்படும்.
ஆப்கானியர் தனது மதம், நாடு, தன் முன்னோர்கள், இவற்றிற்கு மேல் அவர்களது சுதந்திரம் போன்றவற்றில் பெருமை கொள்கின்றனர்.
ஆப்கானித்தான் தொலைத்தொடர்பு துறையில் வேகமாக வளர்ந்து வருகின்றது. இணையம், வானொலி, தொலைக்காட்சிச் சேவைகள் போன்றவற்றில் அதிகமாக விரிவடைந்து வருகின்றது.
2006 இல் ஆப்கானித்தானிய அரசு ZTE என்ற நிறுவனத்துடன் 64.5 அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தைச் செய்ததன் மூலம், அந்நாடு முழுவதும் ஒளியிழைத் தொடர்பாடல் வலையமைப்பை ஏற்படுத்தும் வாய்ப்பை பெற்றுள்ளது.
வர்த்தக நோக்கில் உள்ள விமான சேவை நிறுவனமான அரியானா ஆப்கான் எயார் லைன்ஸ் நிறுவனம், இப்போது லண்டன் ஹீத்ரோவ், பிராங்புர்ட், மட்ரிட், ரோம், துபாய் மற்றும் இஸ்தான்புல் ஆகிய நகரங்களுக்குச் சேவைகளை வழங்கி வருகின்றது.
இச்சேவைகள் காபூல் மற்றும் ஹீரத் ஆகிய நகரங்களில் இருந்து நடைபெறுகின்றது. ஆப்கானித்தானில் டொயோட்டா, லேண்ட் ரோவர், பி.எம்.டபிள்யு மற்றும் ஹயுண்டாய் போன்ற வாகனங்கள் பாவனைக்கு வர தொடங்கியுள்ளது.
- ஆப்கானிஸ்தான் தேசிய மொழி எது? - Pashto, Dari
 
- ஆப்கானிஸ்தான் அழைப்புக்குறி எண்? - 93
 
- ஆப்கானிஸ்தான் இணையக்குறி என்ன? - .afப
 
- ஆப்கானிஸ்தான் சுதந்திர தினம்? - 1919 August 19
 
- ஆப்கானிஸ்தான் நாட்டின் பரப்பளவு எவ்வளவு? - 6,52,090 கிமீ2
 
- ஆப்கானிஸ்தான் தேசியக் கொடி?
 
- ஆப்கானிஸ்தான் தேசிய நினைவுச் சின்னம்?
 
- ஆப்கானிஸ்தான் மக்கள் தொகை எவ்வளவு? - 32.53 million
 
- ஆப்கானிஸ்தான் பிரபலமான உணவு எது? - Kabuli palaw
 
- ஆப்கானிஸ்தான் தேசியப் பறவை எது? - Golden eagle
 
- ஆப்கானிஸ்தான் தேசிய விலங்கு எது? - Snow leopard
 
- ஆப்கானிஸ்தான் தேசிய மலர் எது? - Tulips
 
- ஆப்கானிஸ்தான் தேசிய விளையாட்டு என்ன? - Buzkashi
 
- ஆப்கானிஸ்தான் நாட்டின் நாணயம்? - அப்கானி (AFN)
 
- ஆப்கானிஸ்தான் தலைநகரம் என்ன? - Kabul
 
ஆப்கானிஸ்தான் பற்றி தெரிந்து கொள்ளலாம்! - 
 
        Reviewed by Author
        on 
        
February 23, 2018
 
        Rating: 
      

No comments:
Post a Comment