கற்றாழையில் நிறைந்திருக்கும் எண்ணற்ற பலன்கள் -
அதை முறையாக பயன்படுத்தி வந்தால் நம் உடலின் ஆரோக்கியத்தை மென்மேலும் அதிகரித்துக் கொள்ள முடியும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- தினமும் காலை எழுந்தவுடன் கற்றாழையில் இருந்து எடுக்கப்படும் ஜூஸை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், செரிமான கோளாறுகள் நீங்கி குடல் சுத்தமாகும்.
 
- காலையில் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலின் பாதிக்கப்பட்ட திசுக்கள் நீங்கி வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளும் நீங்கும்.
 
- நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நண்பர்களே, தயவு செய்து கற்றாழை ஜூஸை பருகிடுங்கள். அது உங்கள் உடலின் சர்க்கரை அளவை சீராக பராமரிப்பதோடு வயிற்றில் அல்சரால் ஏற்படும் ரத்தக் கசிவுகளை நீக்கவும் உதவி செய்கிறது.
 
- கற்றாழை ஜூஸை குடிப்பதால் நம் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, தேவையற்ற கலோரிகள் எரிக்கப்பட்டு, உடால் எடை குறைய ஆரம்பிக்கும்.
 
- கற்றாழை மடலில் இருந்து எடுக்கப்படும் ஜெல்லை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து ஒரு மாத காலம்வரை தடவி பாருங்கள். நீளமான கூந்தல் கிடைப்பது நிச்சயம் என உறுதி அளிக்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்கள்.
 
கற்றாழையில் நிறைந்திருக்கும் எண்ணற்ற பலன்கள் - 
 
        Reviewed by Author
        on 
        
February 23, 2018
 
        Rating: 
      

No comments:
Post a Comment