பாலுக்காக அழுத குழந்தையை கழுத்தறுத்து கொலை செய்த தாய்:
மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள தால்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா சிங் (25). இவரது ஒரு வயது குழந்தை கடந்த 7-ஆம் திகதியன்று பால் குடிப்பதற்காக தொடந்து அழுது கொண்டே இருந்துள்ளது.
அனிதா வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து வேலை செய்து கொண்டு இருந்தார். குழந்தையின் அழுகை தொடர்ந்து கொண்டே இருந்ததால், அனிதா ஆத்திரத்துடன் வீட்டுக்குள்ளே சென்ற பின் குழந்தையின் அழுகைச் சத்தம் நின்று விட்டது.
வீட்டின் வெளியே இருந்த அவரது மாமியார் குழந்தை திடீரென்று அழுகையை நிறுத்தியதால் சந்தேகமடைந்து அருகில் இருந்தவர்களை அழைத்துள்ளார்.
அவர்களனைவரும் வீட்டுக்குள் சென்று பார்த்த பொழுது குழந்தை அங்கே கழுத்து அறுபட்ட நிலையில், இரத்த வெள்ளத்தில் பிணமாய் கிடந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் அனிதாவை உடனடியாக கைது செய்தனர்.
அப்போது குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் எரிச்சலின் காரணமாக கொலை செய்ததாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
பாலுக்காக அழுத குழந்தையை கழுத்தறுத்து கொலை செய்த தாய்:
Reviewed by Author
on
February 10, 2018
Rating:

No comments:
Post a Comment