உறவினர்களின் கோரிக்கையால் மீனவரை விடுதலை செய்த இலங்கை! -
மண்டபம் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நான்கு இந்திய மீனவர்களை கடந்த ஜனவரி மாதம் 15-ஆம் திகதி அன்று இலங்கை கடற்படை கைது செய்திருந்தது.
கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்களில் ஒருவரான ஜெயசீலன் என்பவரின் மகன் ஸ்டீபன்(28) என்பவர் நேற்று தீடீரென மரணமடைந்துள்ளார்.
ஸ்டீபனின் மரணத்தை சற்றும் எதிர்பாராத அவரது உறவினர்கள், ஸ்டீபனின் தந்தை ஜெயசீலன் வராமல் அவரின் உடலை எடுக்க மாட்டோம் என இலங்கை அரசுக்கு காட்டமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்ற கொழும்பு பொது வழக்கறிஞர், ஜெயசீலன் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஸ்டீபனின் தங்கை ஸ்டெல்லா கூறுகையில், “என் தந்தை மீது மிகுந்த பாசமும் மரியாதையும் கொண்ட என் அண்ணன் இப்படி எங்களை விட்டு செல்வார் என நினைத்து கூட பார்க்கவில்லை.
என் தந்தையின் கைது தான் என் அண்ணனை மிகவும் உருக்கியது. அதுவே என் அண்ணன் மரணத்துக்கு காரணம் என கூறியுள்ளார்.
மேலும், விடுதலை செய்யப்பட்டுள்ள நான்கு மீனவர்களும் தற்போது அவசர கதியில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
உறவினர்களின் கோரிக்கையால் மீனவரை விடுதலை செய்த இலங்கை! -
Reviewed by Author
on
February 10, 2018
Rating:

No comments:
Post a Comment