மீண்டும் உயிர் பெறலாம்! உடலை உறைய வைக்கும் தொழில்நுட்பம் -
CRYONICS எனப்படும் உறைய வைத்தல் என்றால் என்ன? அது எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?
ஒரு உடலை -196 டிகிரி செல்ஷியசில் உறைய வைப்பதே CRYONICS எனப்படுகிறது.
ஒருவர் சட்டப்பூர்வமாக இறந்ததாக அறிவிக்கப்பட்டதும் இதயம் தன் துடிப்பை நிறுத்திய 2 நிமிடங்களிலிருந்து 15 நிமிடங்களுக்குள் அவரது உடல் ஐஸில் வைக்கப்பட்டு இரத்தம் உறைவதைத் தடுக்கும் வேதிப்பொருட்கள் அவரது உடலுக்குள் ஊசி மூலம் செலுத்தப்படும்.

உடலுக்குள் பனித்துகள்கள் உருவாகாமல் தடுப்பதற்காக இன்னொரு திரவம் உடலுக்குள் செலுத்தப்படும், பின்னர் உடல் -130 டிகிரிக்கு குளிர்விக்கப்படும்.
இந்த உடல் ஒரு கலனில் வைக்கப்பட்டு -196 டிகிரியில் உள்ள திரவ நைட்ரஜன் கொண்ட தொட்டிக்குள் அமிழ்த்தப்படும்.
மருத்துவ உலகில் ஏற்படப்போகும் மாற்றங்களுக்காக மிகத் தாழ்ந்த வெப்பநிலையில் உடல் காத்திருக்கும்.
இவ்வாறு பாதுகாக்கப்படும் உடல்கள் பல நூற்றாண்டுகளுக்கு கூட பத்திரமாக இருக்கும் என்று Cryonics அமைப்புகள் தெரிவிக்கின்றன.
மீண்டும் உயிர் பெறலாம்! உடலை உறைய வைக்கும் தொழில்நுட்பம் -
Reviewed by Author
on
February 24, 2018
Rating:

No comments:
Post a Comment