அண்மைய செய்திகள்

recent
-

தமிழர்களின் கழுத்தறுப்பேன் என மிரட்டிய இலங்கை அதிகாரி: லண்டன் காமன்வெல்த் அலுவலகம் அனுப்பியுள்ள பதில் -


இலங்கை தமிழர்களை மிரட்டு தொனியில் சைகை செய்த பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோ தொடர்பாக உலக தமிழ் பேரவை பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அனுப்பிய மின்னஞ்சலுக்கு லண்டனில் உள்ள வெளிநாட்டு மற்றும் காமன்வெல்த் அலுவத்திலிருந்து பதில் அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் சார்பாக அங்கு வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.




ஆனால் இதை ஏற்க மறுத்த தமிழர்கள் அதற்கு எதிராக போராட்டம் நடத்தியதால், அப்போது இலங்கை தூதரக அதிகாரிகளுடன் இலங்கை இராணுவ உடையுடன் நின்று கொண்டிருந்த பிரியங்கா பெர்னாண்டோ என்ற இலங்கை இராணுவ அதிகாரி, இலங்கை தமிழர்களை நோக்கி கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் சைகை விடுத்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது தொடர்பாக உலக தமிழ் பேரவை பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் லண்டனில் உள்ள வெளிநாட்டு மற்றும் காமன்வெல்த் அலுவத்திற்கு கடந்த 10-ஆம் திகதி மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவை நாடு கடத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.


அதற்கு பதிலளித்து வெளிநாட்டு மற்றும் காமன்வெல்த் அலுவலகம், இந்த சம்பவத்தை பிரித்தானியா அரசு மிகவும் தீவிரமாக எடுத்துள்ளது.
அதுமட்டுமின்றி இது குறித்து இலங்கை அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகவும், வெளியுறவு அமைச்சர் Tilak Marapana-விடமும் இது குறித்து பேசியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த 20-ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோ குறித்து Tilak Marapana பேசியுள்ளார்.
அப்போது அவர் பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோ இலங்கை வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், வந்த பின்னர் அவரிடம் இந்த சம்பவம் குறித்து இலங்கை அரசு விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நேற்று பிரியங்கா பெர்னாண்டோ இலங்கை வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழர்களின் கழுத்தறுப்பேன் என மிரட்டிய இலங்கை அதிகாரி: லண்டன் காமன்வெல்த் அலுவலகம் அனுப்பியுள்ள பதில் - Reviewed by Author on February 24, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.