12 பேர் பலி, 100 பேர் படுகாயம் - சிரியாவில் மீண்டும் கொடூர தாக்குதல்:
சிரியா நாட்டில் 2011ம் ஆண்டு முதல் அரசு படையினருக்கும் கிளர்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கை எனக் கூறி இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் சிரியா நாட்டில் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிப்பதில் ரஷ்யாவும் சிரியாவும் இணைந்து செயல்படுகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதல்களில் சில சமயம் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்றும் தாக்குதல் நடத்தப்பட்டது, இதுகுறித்து பிரிட்டனை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகையில், சிரியாவில் இன்று ஜனாதிபதி ஆதரவு படையினருடன் ரஷ்யாவின் விமானப் படையினர் சேர்ந்து கொண்டு கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கூட்டா நகரில் கர்-பட்னா என்ற கிராமத்தில் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர்.
இக்கொடூர தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், காலை 9 மணி முதல் 2 மணி வரையில் (5 மணி நேரம்) மட்டும் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என சிரியா அரசுப் படைக்கு ஆதரவாக சண்டையிடும் ரஷ்யா அறிவித்தது.
எனினும் சண்டை நிறுத்த அறிவிப்பையும் மீறி அவ்வப்போது தாக்குதல்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
12 பேர் பலி, 100 பேர் படுகாயம் - சிரியாவில் மீண்டும் கொடூர தாக்குதல்:
Reviewed by Author
on
March 17, 2018
Rating:
No comments:
Post a Comment