அண்மைய செய்திகள்

recent
-

கடலுக்கு அடியில் அசத்தல் உணவகம்: இனி மீன்களை பார்த்தபடியே உணவருந்தலாம் -


நார்வே நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்று தங்களது வாடிக்கையாளர்களுக்கு வேறுபட்ட அனுபவத்தை வழங்கும் பொருட்டு கடலுக்கடியில் உணவகம் ஒன்றை திறக்க திட்டமிட்டுள்ளது.
கடற்கரையில் உணவகங்கள் அமைந்திருப்பது உலக நாடுகள் பலவற்றிலும் சர்வ சாதாரணம். இங்கு வாடிக்கையாளர்களும் உணவருந்த பெரிதும் விரும்புவர்.

ஆனால் நார்வே நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்று கடலுக்கடியில் உணவகம் ஒன்றை திறக்க திட்டமிட்டுள்ளது.
இதன் முகப்பானது கடற்கரையிலும் கட்டிடமானது கடலுக்கு அடியில் 5 மீற்றர் ஆழத்தில் அமைந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்க இருப்பதாகவும் குறித்த நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குறித்த உணவகத்தில் ஒரே நேரம் 80 முதல் 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும், அனைத்தும் முன்பதிவு முறைப்படி செயல்படுத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

3 பிரிவுகள் கொண்ட இந்த உணவகத்தில் மது பிரியர்களுக்காக பிரத்யேக அரங்கு ஒன்றும் வடிவமைக்கப்படுகிறது.
உணவகத்தின் பிரதான அரங்கில், இரண்டு பெரிய உணவு மேஜை அமைக்கபப்டும் எனவும், மற்றும் வாடிக்கையாளர்களின் வசிக்கு ஏற்றவாறு பல்வேறு சின்ன மேஜைகளும் அமைக்கப்பட உள்ளது.
இந்த உணவகத்தில் கடல் உணவுகளுக்கே முக்கியத்துவம் வழங்கப்படும் எனவும், உள்ளூர் உணவுகளும் பரிமாறப்படும் எனவும் உணவ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


கடலுக்கு அடியில் அசத்தல் உணவகம்: இனி மீன்களை பார்த்தபடியே உணவருந்தலாம் - Reviewed by Author on March 17, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.