இசைஞானி இளையராஜாவின் ஒவ்வொரு ரசிகரும் பெருமைப்பட வேண்டிய விசயம்!
தமிழ் சினிமா மூலம் இசையால் உலகை ஈர்த்தவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி படம் மூலம் தன் சினிமா பயணத்தை தொடங்கியவர் 1000 படங்களை தாண்டிவிட்டார்.
இன்னும் தொடர்ந்து இசையமைத்து வருகிறார். பல இனிமையான குரல்களை தேடிப்பிடித்து இசைப்பிரியர்களுக்கு தந்தவர். மேலும் தானே சில பாடல்களை பாடியும் உள்ளார்.
இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் இந்திய அரசு பத்ம விபூஷன் விருதை அறிவித்தது. தற்போது அதற்கான் விழா இன்று மாலையில் டெல்லியில் தொடங்கியது. இதில் அவருக்கு முறைப்படி விருது கொடுக்கப்பட்டது.
விருதை இந்திய ஜனாதிபதி வழங்கி சிறப்பு செய்தார்.
இசைஞானி இளையராஜாவின் ஒவ்வொரு ரசிகரும் பெருமைப்பட வேண்டிய விசயம்!
Reviewed by Author
on
March 21, 2018
Rating:

No comments:
Post a Comment