20000 ஆசிரியர்கள் கிழக்கில் இருந்தும் இறுதிநிலை ஏன்? -
திருகோணமலை கல்வி வலய அதிபர்கள் ஆசிரியர்களுக்கான செயலமர்வு உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையின் 9வது இடத்திலுள்ள கிழக்கு மாகாணத்தை ஒருபடி மேலாவது உயர்த்தவேண்டும் என்ற இலக்கு இருக்கவேண்டும்.அதற்கு நான் மட்டும் என்னசெய்யமுடியும்? இதற்கான முக்கிய பொறுப்பு ஆசிரியர்கள்.
உங்களைப் பொறுத்தவரை நிறைந்த அறிவுள்ளது. அதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் மனப்பாங்கில் மாற்றமேற்பட்டுள்ளதா? என்பதில் சந்தேகமிருக்கிறது.
எமது தொழிலை விரும்பியவாறு மாற்றிக்கொள்ளலமா? கிழக்கில் 20ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். அவர்கள் நகரப்புறத்தில் கற்பிக்கவே விரும்புகின்றார்கள்.
வசதிவாய்ப்புகளை அனுபவிக்கவிரும்புகின்றார்கள். அப்படியெனில் பின்தங்கிய பிரதேச மாணவர்கள் கற்பதில்லையா? அவர்களுக்கு கற்பிப்பது யார்?
தேசிய தேவைப்பாடு ஒன்றுள்ளது. தேசிய இலக்குள்ளது. 38லட்சத்து 50ஆயிரம் மாணவர்களும் உள்ளனர். அனைவரையும் நற்பிரஜைகளாக்க வேண்டியது ஆசிரியர்களது கடமை.
தேசத்தைக் கட்டியெழுப்புவர்கள் ஆசிரியர்களே. மாணவர்களை வழிநடத்தவேண்டியவர்கள் நீங்களே. உங்களுக்கு முக்கியபொறுப்புள்ளது.
இந்த நாட்டு ஜனாதிபதிகூட ஆசிரியர்களை இறங்கிவந்து மதிப்பவர். ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது. ஆனால் சில இடங்களில் கூடுதலான ஆசிரியர்கள் உள்ளனர்.
இத்தகைய பயிற்சி ஆசிரியர்களுக்கு அவசியமா? நீண்ட வரலாற்றைக்கொண்ட இலங்கைத் தமிழர் ஆசிரியர்சங்கம்இத்தகையபயிற்சிகளை அளித்துவருவதை நானறிவேன் என குறிப்பிட்டுள்ளார்.
20000 ஆசிரியர்கள் கிழக்கில் இருந்தும் இறுதிநிலை ஏன்? -
Reviewed by Author
on
March 18, 2018
Rating:

No comments:
Post a Comment