இலங்கை தமிழர்களையும் ரோஹிங்யா முஸ்லிம்களையும் ஒன்றாக கருத முடியாது! இந்தியா -
இலங்கை தமிழர்களையும் ரோஹிங்யா முஸ்லிம்களையும் ஒன்றாக கருத முடியாது. அவ்வாறு கருதினால் இந்த விவகாரத்தை தவறாக புரிந்து கொள்வது போலாகும் இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு அகதிகளாக வரும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய மத்திய அரசு வழங்கும் நிவாரண உதவிகளை தங்களுக்கும் வழங்க வேண்டும் என, ரோஹிங்யா முஸ்லிம்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கில், இந்திய மத்திய அரசு நேற்று பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
அதில், “இலங்கை தமிழர்களையும் ரோஹிங்யா முஸ்லிம்களையும் ஒன்றாக கருத முடியாது. அவ்வாறு கருதினால் இந்த விவகாரத்தை தவறாக புரிந்து கொள்வது போலாகும்.
இந்தியா – இலங்கை இடையே 1964 மற்றும் 1979ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இரு ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே இந்திய அரசு இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர்களையும் ரோஹிங்யா முஸ்லிம்களையும் ஒன்றாக கருத முடியாது! இந்தியா -
Reviewed by Author
on
March 18, 2018
Rating:

No comments:
Post a Comment