அண்மைய செய்திகள்

recent
-

வரலாற்று நாயகன் சச்சின் சதத்தில் சதம் அடித்த நாள் இன்று! -


கிரிக்கெட்டில் பொன் எழுத்துக்களால் பொரிக்கப்பட்ட முக்கிய வீரர் சச்சின் டெண்டுல்கர்.
இவர் சதத்தில் சதம் கண்ட ஜாம்பவான் ஆன தினம் இன்று.
தனது 16 வயதில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமானவர் சச்சின்.

மிக இள வயதில் பல்வேறு இக்கட்டான நேரங்களில் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தவர்.
பேட்டிங்கில் ஒரு புரட்சியை செய்த சச்சின் டெஸ்ட் அரங்கில் 200 போட்டிகளில் 329 இன்னிங்ஸில் விளையாடி 51 சதம் உட்பட 15921 ரன்களை சேர்த்தவர்.
463 ஒருநாள் போட்டியில் 452ல் விளையாடி 49 சதங்கள் உட்பட 18426 ரன்களை குவித்தவர்.
சாதனைகளில் சாதனை படைத்த சச்சின், முதல் நபராக ஒருநாள் அரங்கில் 200 ரன்கள் அடித்து சாதித்தவர்.

சதத்தில் சதம்
கிரிக்கெட்டில் தன் கடைசி காலத்தில் மிக மந்தமாக விளையாடி வந்த சச்சின் 34 போட்டிகளுக்கு பின்னர்,
2012 மார்ச் 16ம் தேதி நடந்த ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரில், வங்கதேச அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் சதமடித்து, சதத்தில் சதம் கண்ட தினம் இன்று.

வரலாற்று நாயகன் சச்சின் சதத்தில் சதம் அடித்த நாள் இன்று! - Reviewed by Author on March 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.