ஜெனீவா நிலைமைக்கு முடிவுகட்ட வேண்டும்!
ஜெனீவாவில் எமது நல்லிணக்க மற்றும் மனித உரிமை செயற்பாடுகளை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டாலும் இலங்கை தரப்பில் எமது நிலைப்பாட்டை ஆணித்தரமாக முன்வைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட சகல விடயங்களையும் நாம் ஏற்கவில்லை என்று கூறிய அவர், வெளிநாட்டு நீதிபதிகள் இங்கு வழக்கு விசாரிக்க நாம் எந்த உடன்பாடும் தெரிவிக்கவில்லை எனவும் அமைச்சர் கூறினார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் இலங்கை தூதுக்குழுவில் அங்கம் வகித்த உறுப்பினர் என்ற வகையில் ஜெனீவா அமர்வு தொடர்பில் கருத்து தெரிவித்தார்.மேலும் குறிப்பிட்ட அவர்,
இலங்கை யாப்பின் பிரகாரம் வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க எந்த வாய்ப்பும் கிடையாது. எமது யாப்பிற்கு உட்பட்டதாகவே சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இலங்கை பல்வேறு முன்னெடுப்புகளுக்கான பிரயத்தனங்களை எடுத்திருப்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டது. ஆனால், இவற்றை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டது.
ஆனால், எமது நீதித்துறை பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் சட்டங்கள் என்பன ஊடாகவே அநேக முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். வெளிநாடுகள் கூறுவது போல அனைத்தையும் செய்ய முடியாது. எனவே எமது நிலைப்பாட்டை தௌிவாக எடுத்துரைத்தோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சர் பைசர் முஸ்தபாஇது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், அமைச்சர் பைசர் முஸ்தபா,
2015 ஆம் ஆண்டு முதல் அரசாங்கம் மனித உரிமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அரசியலமைப்பிற்கு உட்பட்டதாகவே அவை மேற்கொள்ளப்படுகின்றன.
வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இங்கு வழக்கு விசாரிக்க முடியாது. அதற்கு பாராளுமன்றம் ஒருபோதும் அனுமதி வழங்காது. ஜனாதிபதியும் அதனை அனுமதிக்க மாட்டார்.
ஜெனீவாவில் எமது குழு சகல நாட்டு தூதுவர்களையும் சந்தித்து எமது தரப்பு நியாயங்களை தெளிவு படுத்தியது.முஸ்லிம் விவகாரம் தொடர்பிலும் தெளிவுபடுத்தினோம்.
முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினை தொடர்பில் சம்பந்தப்பட்ட சகலருக்கும் எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதாகவும் சர்வதேச சமூகத்திடம் இலங்கை உறுதியளித்தது என்றார்.
ஜெனீவா நிலைமைக்கு முடிவுகட்ட வேண்டும்!
Reviewed by Author
on
March 30, 2018
Rating:

No comments:
Post a Comment