காவிரிக்காக தமிழக அரசு பதவி விலக வேண்டும்: கமல்ஹாசன் அதிரடி -
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை கர்நாடக அரசு தர மறுத்து வருவதால் இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த பிரச்சனையில் காவிரி மேலாண்மை வாரியம் என்ற தனி வாரியம் அமைத்து தீர்வு கான 6 வார கால அவகாசம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அந்த கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து, தோல்வியை ஒப்புக்கொண்டு தமிழக அரசு பதவி விலக வேண்டும் என கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், “உண்ணாவிரதம் எல்லாம் கூடாது; வலுவான அழுத்தம் தர தமிழக அமைச்சரவையை கலைக்க வேண்டும். மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தேவைப்பட்டால் மக்கள் நீதி மய்யம் சார்பில் போராட்டம் நடத்தப்படும்” என்று பேசியுள்ளார்.
காவிரிக்காக தமிழக அரசு பதவி விலக வேண்டும்: கமல்ஹாசன் அதிரடி -
Reviewed by Author
on
March 31, 2018
Rating:
No comments:
Post a Comment