மனிதர்களை வேட்டையாட துடிக்கும் உலகின் கொடூர முதலை: உயிர் பீதியில் வாழ்ந்து வரும் மக்கள் -
பிலிப்பைன்சின் Agusan del Sur பகுதியில் அமைந்துள்ள ஆற்றில் சுமார் 30 அடி நீளம் கொண்ட முதலை அங்கிருக்கும் மீனவர்கள் மற்றும் விவசாயிகளை மிரட்டி வருகிறது.
அதுமட்டுமின்றி குறித்த முதலை அவர்கள் வளர்க்கும் கால்நடைகளை வேட்டையாடிச் செல்கிறது.
சமீபத்தில் பெண் ஒருவரை கடித்து தூக்கிச் சென்ற அந்த முதலையை பிடிப்பதற்கு அப்பகுதி மக்கள், வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் தற்போது வரை அந்த முதலை பிடிபடவில்லை.
இந்த தகவலை அறிந்து பிரபல ஆங்கில செய்தி நிறுவனம் குறித்த முதலையை வீடியோ எடுத்த போது, அது சுமார் 29.5 அடி நீளம் கொண்டுள்ளது. உலகிலே அதிக நீளம் கொண்ட முதலையாக உள்ளது.
இதற்கு முன்னர் 23.5 அடி நீளம் கொண்ட முதலையே அதிகம் நீளம் கொண்ட முதலையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை இது உடைத்துள்ளது. 1,075 கிலோ எடை கொண்ட இந்த முதலை, 50 வயதை கடந்திருக்கும் என கருதப்படுகிறது.
மேலும் இந்த முதலையால் மீனவர்கள் மற்றும் விவாசயிகள் பலர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் எந்த நேரத்திலும் அது வந்து தாக்கலாம் என்பதால் அவர்கள பீதியில் உள்ளனர்.
கடந்த மாதம் இதே போன்று இந்தோனிசியாவின் Borneo-வில் முதலை ஒன்றின் வயிற்றை கிழித்து பார்த்த போது அதன் உள்ளே காணமல் போனதாக கருதப்பட்ட நபரின் கை மற்றும் கால்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதர்களை வேட்டையாட துடிக்கும் உலகின் கொடூர முதலை: உயிர் பீதியில் வாழ்ந்து வரும் மக்கள் -
Reviewed by Author
on
March 31, 2018
Rating:
No comments:
Post a Comment