ஆனந்த சுதாகரனின் விடுதலையை வழியுறுத்தி மன்னாரில் பெற்றுக்கொள்ளப்பட்ட கையெழுத்துக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு....
அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட கையெழுத்து போராட்டம் நிறைவடைந்துள்ள நிலையில் கோரிக்கை அடங்கிய கையெழுத்துக்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கும் வகையில் நேற்று வியாழக்கிழமை (29) மன்னார் மாவட்டச் செயலகத்தில் சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகளினால் கையளிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் மனைவி கடந்த மாதம் 15 ஆம் திகதி இயற்கை எய்திய நிலையில் அவர்களுடைய ஆண் மற்றும் பெண் பிள்ளைகளாகிய இருவரும் நிர்க்கதியாகியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த இரு பிள்ளைகளின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வடக்கு- கிழக்கில் தொடர்ச்சியாக பல்வேறு பொது அமைப்புக்களினால் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மன்னாரில் கடந்த 24 ஆம் திகதி சனிக்கிழமை சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்த கையெழுத்து போராட்டம் நேற்று வியாழக்கிழமை(29) காலையுடன் நிறைவடைந்துள்ள நிலையில், கோரிக்கை அடங்கிய கையெழுத்துக்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகளினால் கையளிக்கப்பட்டுள்ளது.
-கடந்த 24 ஆம் திகதி வைபவ ரீதியாக மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகவும், மன்னார் பொது வைத்தியசாலை பிரதான வீதியிலும் கையெழுத்துப் போராட்டம் இடம் பெற்றது.
-அதனைத் தொடர்ந்தும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் ஆனந்த சுதாகரனின் விடுதலைக்காக கையெழுத்து போராட்டம் இடம் பெற்ற நிலையில் நேற்று வியழக்கிழமை(29) மன்னார் மாவட்டச் செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆனந்த சுதாகரனின் விடுதலையை வழியுறுத்தி மன்னாரில் பெற்றுக்கொள்ளப்பட்ட கையெழுத்துக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு....
Reviewed by Author
on
March 30, 2018
Rating:
Reviewed by Author
on
March 30, 2018
Rating:


No comments:
Post a Comment