நீண்ட நேரம் கேம் விளையாடிய சிறுவன் பலியான பரிதாபம் -
இன்றைய இளம்தலைமுறையினரிடமும் செல்போன் மீதான மோகம் அதிகளவில் உள்ளது, சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் பயன்படுத்துவது ஆபத்து என்று தெரிந்தும் பலர் காதில் வாங்கிக் கொள்வதில்லை.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் குத்ராப்பரா என்ற கிராமத்தில் 12 வயதான சிறுவன் ரவி சோன்வான் வீட்டில் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தான்.
செல்போனில் சார்ஜ் தீர்ந்து போனதால், சார்ஜ் போட்டபடியே கேம் விளையாடிக் கொண்டிருந்தான், நீண்ட நேரமாக கேம் விளையாடியதால் ஏற்கனவே சூடாகி இருந்த செல்போன் சார்ஜ் போட்டதால் மேலும் சூடாகி எதிர்பாராத விதமாக திடீரென்று வெடித்துள்ளது.
இதன் காரணமாக சிறுவன் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது, பின்னர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இச்சம்பவத்தால் சிறுவனின் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
நீண்ட நேரம் கேம் விளையாடிய சிறுவன் பலியான பரிதாபம் -
Reviewed by Author
on
April 13, 2018
Rating:

No comments:
Post a Comment