யாழ். கருங்காலி முருகனின் தேர் திடீரென சரிந்து விழுந்தது -
யாழ்ப்பாணம் - காரைநகர் கருங்காலி முருகன் ஆலயத்தின் தேர் திடீரென சரிந்து விழுந்துள்ளது.
கருங்காலி முருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று நடைபெற்று வருகின்றது.
இதன்போது தேர் வலம் வந்துகொண்டிருக்கும் போதே சரிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
தேர்த்திருவிழா ஆரம்பிக்கப்பட்டு இறுதியில் தேரின் இருப்பிடத்திற்கு வரும் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
யாழ். கருங்காலி முருகனின் தேர் திடீரென சரிந்து விழுந்தது -
Reviewed by Author
on
April 28, 2018
Rating:

No comments:
Post a Comment